வெள்ளம் உங்க வீட்டுக்கு மட்டும் வரல.. விஷாலுக்கு பதிலடி கொடுத்த சென்னை மேயர்..!

Author: Vignesh
5 December 2023, 11:18 am

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.

ஆனால், விஷால் நேற்று ஒரு வீடியோவை வெளியிட்டு எம்எல்ஏக்களே வெளியே வாங்க.. மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என சொல்ல பலரும் அவருக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

இதற்கு சென்னை மேயர் பிரியாவும், அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும், அரசு நிறைவேற்றி தரும் என விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

priya
priya
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?