பவர் ஸ்டாருக்கு வந்த பரிதாப நிலை..திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

Author: Selvan
4 December 2024, 5:01 pm

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் உடல்நிலை

பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் இருப்பவர் பவர் ஸ்டார் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாசன்.

Tamil actor Srinivasan health status

இவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக கோளாறு பிரச்னை காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல் நிலை சற்று மோசமாக இருப்பதால் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .

Srinivasan kidney issue treatment


இது முதல் முறையாக அல்லாமல், கடந்த சில ஆண்டுகளாக பவர் ஸ்டார்,பல உடல் நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு முன்பு அவர் மாரடைப்பால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு தற்போது திடீரென சிறுநீரக கோளாறு பிரச்சனை உருவாக்கியுள்ளது.

இதையும் படியுங்க: நா என்ன குத்தாட்ட நடிகையா.. கடுப்பான தமன்னா..!

பவர் ஸ்டாரின் உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்கள் சமூக வலைதளங்களில் கவலையிட்டு வருகின்றனர். “உடனே குணமடைய பிரார்த்திக்கிறோம்” என பலரும் வேண்டி வருகின்றனர்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 80

    0

    0

    Leave a Reply