வேணாம் விட்ருங்க.. பிரபல இயக்குனரிடம் கெஞ்சிய மீனா..!

Author: Vignesh
13 December 2023, 10:45 am

90களில் அதிக படங்களில் நடித்த கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களின் படங்களில் நடித்திருந்தார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்த உள்ளார்.

2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவருக்கு நயனிக்கா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நல குறைவால் காலமானார்.

இந்நிலையில், மீனா சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நாட்டாமை திரைப்படத்தில் நான் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தி கேட்டார்கள். நாட்டாமை திரைப்படத்தில் நடிகை குஷ்பு, மற்றும் நடிகை சங்கவி இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றெல்லாம் தெரியும். இவர்கள் இருவரும் இருக்கும் பொழுது நமக்கு அங்கு என்ன வேலை இருக்க போகிறது என நினைத்தேன்.

meena - updatenews360 3

ஆனால், படையப்பா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி இருந்தேன். எனவே, கால்ஷிப்ட் கொடுக்க முடியாத நிலை, எனவே ரொம்ப டைட்டா இருக்கு வேணாம், விட்டுடுங்க கெஞ்சி தான் அந்த படத்தில் இருந்து வெளியே வந்தேன். ஆனால், தற்போது எனக்கு விருப்பமான இயக்குனர்களில் கே எஸ் ரவிக்குமார் தான் முதல் இடத்தில் இருக்கிறார் என மீனா தெரிவித்துள்ளார்.

  • Rashmika Mandanna துரோகம் செய்தாரா ராஷ்மிகா? காங்கிரஸ் எம்எல்ஏ மிரட்டல்.. என்ன நடந்தது?