நான் வேறொரு நடிகருடன் ரகசிய உறவில்…? மறுமணம் குறித்து உண்மை உடைத்த மீனா!

Author: Rajesh
5 January 2024, 6:50 pm

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகாலும், சிரிப்பழகாளும் ரசிகர்களை வசீகரித்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றார். கோலிவுட்டில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனாவின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து இளமை பருவத்திலே ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை மீனா. தொடர்ந்து இவர் நடித்த வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் நடிகை மீனா.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் மீனாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகள் நைனிகா விஜய்யின் “தெறி” படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துவிட்டார்.

வித்யாசாகரின் மறைவிற்கு பிறகு மீனா மறுமணம் செய்துகொள்வாரா..? என்பது குறித்தும் இரண்டாம் திருமணம் குறித்தும் தொடர்ந்து வதந்திகள் வந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் மீனா வேறொரு நடிகருடன் ரகசிய உறவில் இருக்கிறார் என்றும் அவரை விரைவில் மறுமணம் செய்துக்கொள்ளப்போவதாகும் செய்திகள் வெளியாக அதை கேட்டு கோபத்தின் உச்சத்திக்கே சென்ற மீனா,

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள். நான் வேறொரு சிந்தனையிலும் வேளையிலும் கவனம் செலுத்தி வரும்போது இதுபோன்ற பொய்யான தகவல் என் மனதை உருக்குலைய செய்கிறது. இது என்னை மட்டும் அல்லாமல் என் குழந்தை நைனிகாவையும் பாதிக்கிறது. எனவே இதை இத்தோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள் என்றார் மீனா.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

meena

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் மீனா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பிரபு தேவாவிடம் ” உங்களை எனக்கு சுத்தமா பிடிக்காது. காரணம் நீங்க choreography பண்ணும் போது கொஞ்சம் கூட அட்ஜெஸ்ட் பண்ண மாட்டீங்க. நீங்க சொல்லுறபடியே தான் நாங்க ஆடணும் என்று வலுக்கட்டாயப்படுத்துவீங்க. அந்த விஷயம் பிடிக்காது. ஆனால் அப்படி உங்களுடன் பணியாற்றிய அதனை பாடல்களும் வேற லெவலில் ஹிட் ஆகியது மறக்கமுடியாத அனுபவம் என மீனா பேசினார். இதோ அந்த வீடியோ:

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 458

    0

    0