அவன் ஒரு Play Boy…. பிரபல நடிகரை காதலித்து கழட்டிவிட்ட மீனா?

Author: Rajesh
20 January 2024, 1:55 pm

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. கண்ணழகாலும், சிரிப்பழகாளும் ரசிகர்களை வசீகரித்த நடிகை மீனா தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றார். கோலிவுட்டில் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக மீனாவின் நடிப்பு இன்றும் பாராட்டப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து இளமை பருவத்திலே ‘ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார் நடிகை மீனா. தொடர்ந்து இவர் நடித்த வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. ரஜினி,கமல்,அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடி போட்டு தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கினார் நடிகை மீனா.

meena

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வரும் மீனாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. மீனா, 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் மகள் நைனிகா விஜய்யின் “தெறி” படத்தில் அறிமுகமாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துவிட்டார். வித்யாசாகர் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மரணமடைந்துவிட்டார்.

தயவு செய்து இதுபோன்ற செய்திகளை வெளியிடாதீர்கள். நான் வேறொரு சிந்தனையிலும் வேளையிலும் கவனம் செலுத்தி வரும்போது இதுபோன்ற பொய்யான தகவல் என் மனதை உருக்குலைய செய்கிறது. இது என்னை மட்டும் அல்லாமல் என் குழந்தை நைனிகாவையும் பாதிக்கிறது. எனவே இதை இத்தோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள் என்றார் மீனா.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். மலையாளத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மீனாவை காதலித்த நடிகர்கள் என நாம் செய்திகள் பார்த்திருப்போம். ஆனால், தற்போது மீனா காதலித்த பிரபலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம் மீனா, நடன இயக்குனர் பிரபு தேவா உடன் இணைந்து டபுள்ஸ் படத்தில் நடித்தபோது அவரின் திறமையை கண்டு வியந்து காதலிக்க ஆரம்பித்தாராம். ஆனால், மீனாவின் காதலை அவரின் தோழிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பிரபு தேவா சரியான பிளே பாய் அவர் பல நடிகைகளை இப்படி தான் பேசி மயக்கி தன் வலையில் விழவைப்பார் என கூறியதும் மீனா உஷார் ஆகி பிரபு தேவாவை நைசாக கழட்டிவிட்டாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 441

    0

    0