அவர் அப்பா மாதிரி.. இப்படி எல்லாம் பேசாதீங்க.. வெளிப்படையாக பேசிய மீனா..!
Author: Vignesh16 September 2023, 10:12 am
நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் கணவரை இழந்த 46 வயதான நடிகை மீனாவும், மனைவியை பிரிந்துவிட்ட தனுஷும் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் போலியான செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீனா தற்போது கணவரை இழந்து இருக்கிறார். அதே போல் நடிகர் தனுஷும் மனைவியை பிரிந்துவிட்டார். எனவே இவர்கள் இருவரும் மறுமணம் செய்துக்கொள்ளலாம் என பயில்வான் பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை கிளப்பினார்.
இந்த விஷயம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் இருந்த மீனா பின்னர், இது குறித்து வருத்தம் தெரிவித்தார். நான் இன்னும் என் கணவர் இறந்ததையே நம்ப முடியாமல், ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறேன். நடிகர் ரஜினி எனக்கு அப்பா போன்றவர் என்றும், அவரது மருமகனை திருமணம் செய்யப்போவது எல்லாம் கட்டுக்கதை இந்த மாதிரி எல்லாம் வதந்தியை பரப்பாதீங்க என்று மீனா தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நேரத்தில் இது போன்ற செய்திகள் மனம் உருக்குலைய செய்கிறது என அவர் வேதனையை பகிர்ந்தார்.