எல்லாத்துக்கும் காரணம் நீ தான்… அம்மா மீது கோபப்பட்டு நெனச்சி நெனச்சி அழும் மீனா!

Author: Shree
27 March 2023, 8:59 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில் மீனாவுக்கு தான் முதலில் படையப்பா படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அவர் அம்மா ரஜினியோடு நடித்து நிறைய படங்கள் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்களை கிடைத்துள்ளது. இப்போ வந்து நெகட்டிவ் ரோலில் நடித்தால் கெட்டபெயர் வரும் என கூறி வேண்டாம் என சொல்லிவிட்டராம்.

பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடித்து பெரும் புகழ் பெற்றார். இந்நாள் வரைக்கும் அவர் நடிப்பு பேசும்படியாக உள்ளதை நினைந்து மீனா அவர் அம்மா மீது கோபப்பட்டு நினைத்து நினைத்து வருந்தி வருகிறாராம்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!