கமலுடன் லிப்லாக் காட்சி: நெருங்கி வந்து… அம்மாவிடம் கதறி அழுத மீனா!

Author: Shree
30 July 2023, 5:22 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

meena - updatenews360 3

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய மீனா அவ்வை சண்முகி படத்தில் கமலுடன் நடித்தது குறித்து பேசினார்.

அப்போது, கமல் ஹாசன் படம் என்றாலே நிச்சயம் ஒரு முத்தக்காட்சி வைத்துவிடுவார்கள். நான் அதை யோசிக்காமல் கேட்காமல் ஒப்பந்தமாகிவிட்டேன். அதன் பின்னர் ஒரு நாள் ஷூட்டிங்கில் முத்தக்காட்சி எடுக்க போகிறோம் தயாரா இருங்கள் என கே எஸ் ரவிக்குமார் சார் சொன்னார். அதை கேட்டதும் நான் ஓடி சென்று அம்மாவிடம் கூறி அழுதேன்.

எனக்கு முத்த காட்சிகளில் நடிப்பது பிடிக்கவில்லை. விருப்பமே இல்லாமல் பயத்துடன் நடித்தேன். அப்போது கமல் முத்தம் கொடுப்பது போல் என் அருகில் வந்து ” இந்த முறை வேண்டாம்” என கூறி முத்தம் கொடுக்காமல் சென்றுவிட்டார். அப்போது சந்தோஷத்தில் நான் துள்ளி குதித்தேன் என மீனா அந்த பேட்டியில் கூறியுள்ளார். முத்த காட்சிகளுக்காக கமல் படத்தில் நடிக்க வரும் நடிகைகளுக்கு மத்தியில் இப்படியும் ஒரு நடிகையா என எல்லோரும் மீனாவை பார்த்து ஆச்சர்யப்பட்டார்களாம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 707

    1

    0