குறைக்கும் நாயிக்கு பயப்பட தேவை இல்லை.. ‘அவங்களுக்கு’ மீனா நெத்தியடி போஸ்ட்..!
Author: Vignesh30 July 2024, 5:58 pm
முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்கள் நடித்து 90s பேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் மீனா சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
ஆனால், தன் மகள் நைனிகாவை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மீனாவின் கணவர் உயிரிழந்தார். அது மீனாவை மிகவும் பாதித்தது. அதிலிருந்து, வெளியே வந்து தற்போது, படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரைப் பற்றிய வதந்திகள் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசியல் பிரமுகர் ஒருவரை இணைத்து பேசி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஒரு நிலையான உள்போராட்டத்தை அனுபவித்து வருகிறேன் என்றும், மிகவும் வலியை உணர்கிறேன் என்றும், ஆனால் நீங்கள் என்னை பார்க்கும் பொழுது நன்றாக இருப்பது போல் தோன்றும். ஆனால், என் வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்கள் முட்டாள்கள் ஆக தான் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் குறைக்கும் நாயிக்கு நம்ம பயப்பட தேவை இல்லை.. அந்த நாயி எதற்கு குறைக்கிது நமக்கு தெரியும்.. நீங்கள் உங்க வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதை பார்த்து அந்த நாயிகள் செத்து போய்டும்.. இல்லனா சிறையில் புடிச்சி போடுங்க. ரெண்டு வருஷம் கம்பி உள்ளே இருந்தா அடங்கிடும் என கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.