அந்த பிரபல நடிகர் மீது அளவில்லாத ஆசை… அப்பட்டமாக பேட்டியில் பேசிய மீனா..!
Author: Rajesh20 August 2023, 11:50 am
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை தொடங்கியவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித், அர்ஜுன் என முன்னணி நடிகர்களின் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்து 80ஸ் மற்றும் 90ஸ் களில் கனவு கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் பிரபல நடிகையாக இருந்து வந்த இவர், 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார். கணவரின் மறைவால் துக்கத்தில் இருந்த மீனா, அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்.
தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் மீனா. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா, தனக்கு பிரபல நடிகர் மீது இருந்த அளவில்லாத ஆசை குறித்து அப்பட்டமாகக் பேசியிருக்கிறார். புகைப்படங்களை பார்த்து அது குறித்து பேசி வந்த மீனா, ரித்திக் ரோஷன் போட்டோவை காட்டிய உடன் உணர்ச்சிவசப்பட்டு அவரைப்பற்றி பேசத் தொடங்கினார்.
அப்போது, “எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். அந்த போட்டோ எடுத்தப்போ, அவருக்கு அன்னிக்கு கல்யாணம். அப்போ எனக்கு மேரேஜ் ஆகல. என் இதயமே நொறுங்கிடுச்சு. என் அம்மா கிட்ட கூட ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்கம்மான்னு சொன்னேன்” என வெளிப்படையாக மீனா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.