அவரோட படத்துல அந்த மாதிரியான உணர்வு.. முதலும் கடைசியாய் செய்த விஷயத்தை பற்றி பகிர்ந்த மீனா..!

Author: Vignesh
19 January 2024, 8:11 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றிருப்பவர் நடிகை மீனா. ரஜினி உடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா மற்றும் முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.

meena

கணவர் மரணத்திற்கு பின்னர் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற கனவோடு இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியிருக்கிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மீனா கிளாமர் காட்சியில் நடிப்பது குறித்து பேசி உள்ளார். அதில், அவர் நான் கிளாமர் காட்சியில் நடித்து கொண்டிருந்த காலத்தில், என்னை சுற்றி ஏன் நீங்கள் கிளாமர் காட்சியில் நடிக்க முயற்சிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்படி ஒரு முயற்சி செய்தால் என்னவென்று எனக்கே தோன்றியது.

meena - updatenews360 3

அதனால், பிரபுதேவா படத்தில் நீச்சல் உடையில், நடித்தேன். நீச்சல் உடை அணிந்ததும் மேக்கப் ரூமிலிருந்து என்னால் வெளியே வரவே முடியவில்லை நெருடலாக இருந்தது. அப்படியான சமயத்தில்தான் இந்த மாதிரியான கிளாமர் மற்றும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்கும் நடிகைகளின் காலில் விழுந்து கும்பிடவேண்டும் என தோன்றியது. அதீத கவர்ச்சி மற்றும் நீச்சல் உடை போன்ற காட்சிகளில் மீனாவின் முதல் மற்றும் கடைசி படம் அதுதான் என மீனா கூறிய விஷயம் ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?