உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஹிட் திரைப்படங்களில் நடித்து அசைக்க முடியாத இடத்தில் மறந்துவிட்டார். தற்போது 68 வயதாகும் கமல் ஹாசன் முன்னணி நட்சத்திர நடிகராகவே இருந்து வருகிறார்.
கூடவே நிறைய காதல்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அந்த லிஸ்டில் நடிகை ஸ்ரீவித்யா, சிம்ரன், அபிராமி , கவுதமி, பூஜாகுமார், ஆண்ட்ரியா என காலத்திற்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டே சென்றது.
இந்நிலையில் தற்போது பிரபல இளம் நடிகையான மீனாட்சி கோவிந்தராஜன் கமல் ஹாசன் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இவர் கோப்ரா, கென்னடி கிளப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
“எனக்கு நடிகர் கமல் ஹாசனை ரொம்ப பிடிக்கும், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. அது மட்டுமின்றி கமல் உடன் ஒரு நாளாவது உதவியாளராக இருக்க வேண்டும். அவர் படத்திற்காக என்னவெல்லாம் செய்கிறார் என அருகில் இருந்து பார்க்க வேண்டும்” என மீனாட்சி கோவிந்தராஜன் தன் ஆசையை கூறி இருக்கிறார்.