சீரியல் நடிகைகளுள் குடுமிப்பிடி சண்டை…. நடந்தது என்ன? புதிய வீடியோ லீக்!

Author: Rajesh
31 December 2023, 8:00 pm

பொதுவாக சீரியல்களில் தான் குடும்ப சண்டைகளும், பிரச்சனைகளும் நீண்ட தொடராக ஒளிபரப்பாகி குடும்பத்திற்கும் கலவரத்தையே உண்டாக்கும். ஆனால், தற்போது சீரியலில் நடிக்கும் நடிகைகள் இருவருக்கும் நீ பெருசா…? நான் பெருசா…? என்ற வாக்குவாதத்தில் சண்டை முற்றி ஷூட்டிங் ஸ்பாட்டிலே அடிதடிதடியில் ஈடுபட்டு குடுமிப்பிடி சண்டையாக முடிந்துள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “மீனாட்சி பொண்ணுங்க” சீரியலில் நடித்து வரும் சசிலயா மற்றும் ஆர்த்தி ராம் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதாவது சசிலயா சேரில் அமர்ந்துக்கொண்டிருந்தாராம். அவரிடம் இடம் கேட்டுள்ளார் ஆர்த்தி ராம். அதற்கு அமர இடம் தர மறுத்த சசிலயாவை ஆர்த்தி ராம் ‘ நான் ஒரு சீனியர் நடிகை எனக்கு தகுந்த மரியாதை கொடுக்காதது மட்டுமின்றி எதிர்த்து பேசுறியா? என வாக்குவாதம் செய்து ஓங்கி அடித்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

சீரியல்களில் நடிக்கும்போது தான் குடும்ப சண்டை , பிரச்சனைன்னு நெனச்சா இதுங்க ஷூட்டிங் ஸ்பாட்டில் உண்மையிலே இப்படிதான் அடிச்சிக்கிதுங்களா? என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆர்த்தி ராம் தன்னை தாக்கியதை சசிலயா செல்போனில் படம்பிடித்து அதை இயக்குனரிடம் காட்டி புகார் கொடுத்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை போலீசில் புகார் ஏதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ:

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!