இசையமைப்பாளருடன் நெருக்கம்.. வாழ்க்கையை தொலைத்த மீரா ஜாஸ்மின்..!(வீடியோ)
Author: Vignesh15 February 2024, 5:19 pm
நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழில் அறிமுகமானார். அதைதொடர்ந்து புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி ஆகிய படங்களில் நடித்தார். சண்டக்கோழி படத்தில் மீரா ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் பதிந்தார். 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இதனிடையே உடல் பருமான உடலை குறைத்து செம்ம ஸிலிம்மாக மாறி ரீ என்டரி கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார்.தொடர்ந்து தனது புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இதனிடையே, திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் மீரா ஜாஸ்மின் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குனராக அறிமுகமாகும் டெஸ்ட் படத்தில் மாதவன் சித்தார்த் நயன்தாராவோடு இவரும் இணைந்துள்ளார்.
இதனிடையே, விமானம் மற்றும் குயின் எலிசபெத் போன்ற படங்களிலும் நடித்து இருந்தார். மீரா ஜாஸ்மின் ஆரம்பத்தில் கிளாமரே காட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போது 41 வயதான நிலையில் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை ஈர்த்து வருகிறார்.
இந்தநிலையில், பிரபல சினிமா பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மீரா ஜாஸ்மின் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு முன்பு இசைக்கலைஞர் ஒருவருடன் காதலில் இருந்துள்ளார். அவரின் இசையில் மயங்கி தனது மனதையும் பறிகொடுத்துவிட்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். அதன்பின், மீரா ஜாஸ்மின் வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், அந்த திருமணத்திற்கு பின் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால், தான் இவருக்கு சினிமா வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.