5, 10க்கு அலையா அலைந்தவன் சூரி…. அவன் எல்லாம் நடிகனாகி பிளைட்ல போறான் – பிரபல நடிகர் வருத்தம்!

Author: Shree
27 June 2023, 9:18 am

தமிழ் சினிமாவில் கூட்டத்தில் ஒருவராக காமெடி காட்சியில் தலைகாட்டியவர் நடிகர் சூரி. மதுரையை சொந்த ஊராக கொண்டு கிராமத்தானாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு 2009ல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். 1997முதல் தற்போது வரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

காமெடி நடிகராக நடித்து இன்று ஹீரோவாக கோடிகளில் சம்பளம் வாங்குபவராக சூரி உயர்ந்திருக்கிறார். அதற்காக அவர் மிகவும் உழைத்து தான் இந்த இடத்தை பிடித்துள்ளார். ஆம், தனது உடலை கட்டுமஸ்தான தோற்றத்தில் வைக்க எப்போதும் உடற்பயிற்சி, ஒர்க் அவுட் என கடைபிடித்து ஹீரோவுக்கான தோற்றத்தையும், உடல் அமைப்பையும் வரவைத்துக்கொண்டார். அவரது transformation பல டாப் நடிகர்களையே பிரம்மிக்க செய்தது.

சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். மற்ற எந்த காமெடி நடிகர்களும் இந்த அளவிற்கு உயர்ந்ததில்லை என கோலிவுட்டில் பேசப்படுகிறார். அப்படித்தான் பேட்டி ஒன்றில் பிரபல காமெடி நடிகர் மீசை ராஜேந்திரன், சூரி ஒரு காலக்கட்டத்தில் என்னுடன் சப்போர்ட்டிங் ஆக்டராக நடித்து தற்போது நடிகராக மாறியிருக்கிறான்.

எனக்கு பின்னால் நடிக்க வந்து, என்னைவிட சம்பளம் கம்மியாக வாங்கிய சூரிக்கு இப்படியொரு வாய்ப்பு…. 10 வருடத்திற்குள் எல்லாம் அப்படியே உல்டாவாக மாறியிருக்கிறது. நான் எப்போதும் போலவே வழக்கமாக பஸ்ஸில் போகிறேன். ஆனால் சூரியின் அசிஸ்டண்ட்டிடம் கேட்கும் போது, சார் பிளைட்டில் வருவார் என்று கூறினார். அதை கேட்டு கொஞ்சம் மனவருத்தமடைந்தேன். இனிமேல் என் மைனஸ் தெரிந்து அதை மாற்றும் நிலையில் நான் இருக்கிறேன் என்று நடிகர் மீசை ராஜேந்தரன் ஆதங்கப்பட்டு புலம்பி இருக்கிறார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்