விஜய் ஆட்சியை பிடிப்பது சந்தேகம் தான்.. விக் இருக்கான்னு பார்க்காதீங்க.. தலையில சரக்கு இருக்கான்னு பாருங்க..- கண்டபடி பேசிய நடிகர்..!
Author: Vignesh19 June 2023, 6:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். 1992ல் நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய்.
முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் விஜய் விரைவில் அரசியலிலும் இறங்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களை ஒன்றிணைக்கும் விதமாகவும், நலத்திட்ட உதவிகள் செய்வதில் ஈடுபடும் விதமாகவும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத் தொகை நேற்று வழங்கினார். சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் நடைபெற்ற இந்த விழாவில் சுமார் 1,500 மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த விழா மேடையில் பல விஷயங்களை விஜய் பகிர்ந்துகொண்டார்.
விஜய் பேசியது குறித்து பலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்தும் வருகிறார்கள். தமிழ் சினிமாவில் வில்லன் ரோலில் நடித்து வரும் நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யை விமர்சித்து இருக்கிறார். அதில், விஜய்யின் சமீபத்திய அரசியல் நுழைவு குறித்தும் அது தப்பில்லை நடிகர்கள் அரசியலுக்கு வரலாம் என்றும் இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு மாஸ் இருக்கிறது எனவும் ஆனால், அது ஒரு கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிப்பது சந்தேகம்தான் எனவும் தற்போது, இருக்கும் கட்சிகளின் ஓட்டை பிரிப்பாரை தவிர ஆட்சியைப் பிடிக்க மாட்டார்.
பிஜேபி உடன் கூட்டணி போடுவார் என நினைக்கிறேன் என்றும், ரசிகர்களை மட்டும் நம்பி இருக்கக்கூடிய விஜய் சக நடிகர்களுடன் கனெக்ட் ஆகாத விஜய் எப்படி மக்களிடம் கனெக்ட் ஆகுவார் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
விஜய் எப்பொழுதுமே தனியாக தான் இருப்பார், யாரையும் அவருக்கு நெருக்கமானவர்களையும் கூட நெருங்க விடமாட்டார் என்றும், அந்த மேடையில் பேசியதை வைத்து அரசியலை நிஜமாக்குவது விஜய்க்கு கடினம் தான் எனவும், தெரிவித்திருக்கிறார்.
மேலும், பேசுகையில், விஜய்க்கு பேச்சு திறமை இருக்கிறதா என்றால் அது சந்தேகம் தான் என்றும் கூறியுள்ளார். விஜய் தலையில் வீக் இருக்கா இல்லையா என யோசிக்க கூடாது எனவும், சரக்கு இருக்கான்னு பாருங்க என்றும் கூறியுள்ளார்.
தலையின் முடி இல்லை என்று பார்ப்பது தவறு நடிப்புதான் முக்கியம். இதெல்லாம் சர்ச்சைகளுக்கான கருத்து கிடையாது எனவும், ரஜினிகாந்த் சாரே அதை யோசிக்காமல் நடித்து வருகிறார் எனவும் மீசை ராஜேந்திரன் தெரிவித்திருக்கிறார்.