தமிழ் சினிமாவின் இளம் நடிகையான மேகா ஆகாஷ் கடந்த 2017 ஆம் ஆண்டில் தெலுங்கு சினிமாவின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். அவரது தந்தை தெலுங்கு, தாய் மலையாள பின்னணியை கொண்டவர். இவர் தமிழில் நடித்த முதல் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இந்த திரைப்படம் வெளியான போது மேகா ஆகாஷிற்கு மிகப்பெரிய பேன் பேஸ் உருவாக்கினார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே பாடலின் மூலமாக ஒட்டுமொத்த இளைஞர்களின் மனசையும் கொள்ளை அடித்து சென்று விட்டார் மேகா ஆகாஷ். அடுத்ததாக வெளிவந்த திரைப்படம் தான் வந்தா ராஜாவா தான் வருவேன். இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார். பிறகு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து பிசியாக வலம் வந்து கொண்டிருந்தார் மேகா ஆகாஷ்.
தொடர்ந்து இவரது நடிப்பில் வெளிவந்த வடக்குப்பட்டி ராமசாமி மற்றும் சமீபத்தில் வெளிவந்த மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட சில திரைப்படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென மேகா ஆகாஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
நீண்ட நாள் காதலரான சாய் விஷ்ணு விஷ்ணுவுடன் இந்த நிச்சயதார்த்தம் மிகவும் சிம்பிளான முறையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றிருக்கிறது. அப்போது எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு மேகா ஆகாஷ் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதாக கூறி திருமணம் நிச்சயதார்த்தமாகிவிட்டதை உறுதி செய்துள்ளார்.
இதையடுத்து மேகா ஆகாஷின் வருங்கால கணவர் யார்? என்பது குறித்த ரகசியம் தற்போது வெளியாகிய எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த “பேசினால் போதுமே அன்பே” என்ற குறும்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் மேற்பட்ட நெருக்கம்தான் பின்நாளில் காதலாக மாறியது.
அதாவது, மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் யார் என்பது தெரிந்தால் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பிரபல அரசியல் தலைவரும். எம் பி யு ஆன திருநாவுக்கரசரின் மகன் தான் சாய் விஷ்ணு. எஸ் டி ஆர் சாய் விஷ்ணு மற்றும் மேக ஆகாஷ் திருமணம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷனில் மிகவும் பிரம்மாண்டமாக திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் சூழல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் மேகா ஆகாஷ் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரான சாய் விஷ்ணு குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து அவர் போலீசாரை தகாத வார்த்தையால் திட்டி இருக்கிறார்.
பின்னர் நான் யார் தெரியுமா? என்னோட பேக்ரவுண்ட் என்ன தெரியுமா? என்று போலீசாரிடம் சவால் விட்டு கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி இந்த சமயத்தில் வைரலாக மேகா ஆகாஷின் ரசிகர்கள்…எம்மா இவனையாமா நீ கல்யாணம் பண்ணிக்க போற? கொஞ்சம் யோசிச்சு முடிவெடுமா… என அறிவுரை கூறிய வருகிறார்கள். இதோ அந்த வீடியோ
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
தனுஷ் இயக்கத்தில் உருவாகும் 4வது படம்தான் இட்லி கடை. ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள்…
This website uses cookies.