உள்ளாடையை கூட விட்டு வைக்கல.. தனுஷ் படம் நடிகை வேதனை..!

Author: Vignesh
22 December 2023, 4:00 pm

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடலில் நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர் மேக்னா நாயுடு.

meghna naidu dhanush

இதனை அடுத்து, இவர் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில், மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அவர் தங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருந்ததாகவும், தன்னுடைய வீட்டை தாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.

meghna naidu dhanush

இதனிடையே, தங்களுடைய வீட்டை ஒரு தம்பதியினருக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். திடீரென அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் தான் வைத்திருந்தேன்.

meghna naidu dhanush

அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் அவர்கள் திருடி கொண்டு சென்று விட்டார்கள். என்னுடைய உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை என்று மேகனா நாயுடு வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…