மெய்யழகன் படத்தை பார்த்து கண்ணீருடன் பதிவு… பிரபல பாலிவுட் நடிகர் பாராட்டு..!

Author: Selvan
8 December 2024, 7:07 pm

மக்களின் மனதை கொள்ளை கொண்ட கதை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி.அவரது 27வது படமாக உருவான “மெய்யழகன்” திரைப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் உருவாக்கினார்.

இந்த படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக பிரபல நடிகர் அரவிந்த் சாமி இணைந்து நடித்துள்ளார்.

Meiyazhagan Movie Success

மேலும் ஸ்ரீதிவ்யா,ராஜ்கிரண்,தேவதர்ஷினி,ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர்.கார்த்தி மற்றும் அரவிந்த் சாமிக்கு இடையேயான உறவின் முக்கியத்துவத்தை பேசும் இந்த திரைப்படம் உணர்ச்சிகரமான கதையை கொண்டுள்ளதால்,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இதையும் படியுங்க: சமந்தா நிலைமை தான் ராஷ்மிகாவுக்கு…விஜய் தேவரகொண்டா குடும்பத்தை தாக்கிய பயில்வான்…!

இந்த படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுக்களை பெற்றது.OTT-யில் வெளியாகி பலதரப்பட்ட ரசிகர்கள் படத்தை பாராட்டி வந்தனர்.

மெய்யழகனுக்கு கிடைத்த பாராட்டு

அந்த வரிசையில், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் தற்போது “மெய்யழகன்” திரைப்படத்தை பார்த்து சமூக வலைத்தளங்களில் தன் பாராட்டுகளை பதிவு செய்துள்ளார்.

“மெய்யழகன் படத்தை பார்த்தேன்,என்ன ஒரு அற்புதமான படம். அழகாகவும் எளிமையாகவும் இருந்தது.படம் என்னை நிறைய அழுக வைத்தது. என் நண்பர் அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி சிறப்பாக நடித்துள்ளனர்.படத்தின் ஒவ்வொரு இடத்திலும் குழுவினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.குறிப்பாக இயக்குநர் பிரேம் குமார் தன்னுடைய திறைமையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.” என தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan viral video சோதிக்காதிங்கடா…விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!
  • Views: - 73

    0

    0

    Leave a Reply