96 என்ற படத்தின் மூலம் பிரிந்து போன இரு காதலர்களின் உணர்வுகளை சொல்லி அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கவர்த்தவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் தற்போது கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி வைத்து மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் பிரிந்து போன உறவுகளின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. மேலும், சொந்த ஊரை விட்டு, சொந்த வீட்டை இழந்து, சென்னைக்கு வர்ற பலரோட வலிகளை இந்த ” மெய்யழகன்” திரைப்படம் காட்டியிருக்கு.
மெய்யழகன் திரை விமர்சனம்:
மெய்யழகன் திரைப்படம் சொந்த ஊர் உறவு ஆகியவற்றை பிரிந்து சிறிது காலம் வாழ்ந்து விட்டு பிறகு மீண்டும் திரும்பும் ஒருவரின் பரிதவிப்பவையும் இந்த மெய்யழகன் திரைப்படம் விளங்குகிறது. சிறுவயதிலிருந்து வளர்ந்து வந்த பூர்வீக வீட்டினை சொத்து பிரச்சனையால் இழக்கிறது அருள் மொழியின் (அரவிந்த்சாமி)யின் குடும்பம் .
இதனால் தந்தையின் முடிவுக்கு ஏற்ப தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு குடிபெயர்க்கிறார் அரவிந்த்சாமி. 22 வருடங்கள் கழித்து தன் உறவுக்கார தங்கை ஒருவரின் திருமணத்திற்காக மீண்டும் ஊருக்கு செல்லும் அருள்மொழி என்கிற அரவிந்த்சாமி இரவு திருமண வரவேற்பு முடித்துவிட்டு கடைசி பேருந்தில் ஏறி சென்னைக்கு வந்து விட வேண்டும் என்ற ஒரு முடிவோடு தான் அவர் செல்கிறார் .
ஆனால், சென்ற இடத்தில் அத்தான் அத்தான் என அன்பில் திக்கு முக்காட வைக்கிறார். ஒரு பெயர் தெரியாத உறவுக்கார தம்பி. அதாவது, கார்த்தி மிகவும் தெரிந்தவர் போல கூடவே ஒட்டிக்கொண்டு சிறுவயது நினைவுகளை அரவிந்த் சாமியுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்த உறவின் அன்பில் மனதை தொலைத்த அருள் மொழி:
உங்களை அடையாளமே தெரியவில்லை என்று கூற சங்கடப்படுகிறார் அருள்மொழி. இப்படி ஒரு சூழலில் தான் அவர் சென்னைக்கு திரும்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த அந்த கடைசி பேருந்தையும் தவற விட்டு விடுகிறார். இதனால் பெயர் தெரியாத அந்த நபரின் வீட்டிலேயே இரவு தங்க வேண்டிய சூழ்நிலை அருள்மொழிக்கு ஏற்படுகிறது.
அப்படி ஒரு இரவில் தான் அவர்கள் இருவருக்கும் நடக்கிற உரையாடல்கள், உணர்வுகள், பகிர்வுகள் பழைய நினைவுகள். உள்ளிட்ட பழைய நினைவுகள் நம்மை அழைத்து செல்கிறது. இந்த படத்திற்கு முழு பலமாகவும் படத்தை தாங்கி கொண்டு செல்பவராக கார்த்தி நடித்திருக்கிறார். நினைவுகளை திரும்பி பார்க்கும் இடத்தில் ஏற்படும் தவிப்பு பிரிந்த உறவுகளை மீண்டும் காணும் போது கண்களை குளமாக்கும் நடிப்பு உள்ளிட்டவை. உள்ளிட்டவற்றில் அரவிந்த்சாமியை மிஞ்ச ஆளே இல்லை என நம்மை தோன்ற வைத்து விடுகிறார்.
பாதி படத்தை தாங்கிச்செல்லும் கார்த்தி:
குறிப்பாக சொல்லப் போனால் “யாரோ இவன் யாரோ” என்ற அன்பில் கலங்கி ஓடுகிற இடத்தில் நம் மனதில் அப்படியே நின்று விடுகிறார் அரவிந்த்சாமி. அதே போல் இந்தப் படத்திற்கு உயிர் கொடுக்கும் அளவிற்கு கார்த்தியின் நடிப்போம் கள்ள கபடமில்லாத பேச்சும் எதார்த்தமான உடல் மொழி உள்ளிட்டவற்றால் பாதி படத்தை அப்படியே தோளில் சுமந்து கொண்டு செல்கிறார். இயல்பான கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி எல்லோருது மனதையும் கவர்ந்து விட்டார் கார்த்தி.
இந்த திரைப்படத்தில் பெரிதாக தங்களுக்கான போர்ஷன் இல்லை என்றாலும் தேவதர்ஷினியும் , ஸ்ரீ திவ்யாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். மேலும் தங்கையாக வரும் சுவாதி அந்த ஒரு காட்சியிலேயே எல்லோரையும் கலங்க வைத்து விட்டார். மேலும் இந்த படத்தில் நடித்திருக்கும் உறவுக்காரர்கள் மற்றும் சின்ன சின்ன பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த கதாபாத்திரத்தை கொடுத்து இருக்கிறார்கள்.
சென்னைக்கு வந்த பலரின் மனதை லேசாக்கிய ” மெய்யழகன்”
மீண்டும் கௌரவமான கதாபாத்திரத்தில் பெரியவர் போன்ற தோற்றத்தில் நடித்த ராஜ்கிரீன் நம்ம எல்லோரது மனதையும் கவர்ந்து விட்டார். படத்தை சுற்றி மிகவும் அமைதியான மனதுக்கு நெருக்கமான லொகேஷன்கள் நம் மனதை நெகிழ வைக்கிறது. கோவில் ,மண்டபம், வயல்வெளி, காவிரி நதிக்கரையோரம் தஞ்சை மண்ணில் நம்மையும் சேர்த்து நடக்க வைக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்:
எனவே உறவுகளின் உணர்வை தேடி சென்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் மனதை முழு மனதையும் திருப்தி அடைய செய்யும். எனவே மெய்யழகன் திரைப்படம் ஆர்ப்பாட்டம் இல்லாத திரை மொழி, எளிமையான வசனங்கள், எதார்த்தமான மனிதர்களின் நடிப்பு, உன்னதமான அழகான உறவுகளின் நினைவுகளின் அசைவோடு அனைவரது மனதையும் கொள்ளையடித்து விட்டார் இயக்குனர் பிரேம்.