பாப்புலரான சீரியலின் பார்ட் 2 ரெடி… படப்பிடிப்பை தொடங்கினார் திருமுருகன்!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2024, 7:21 pm

2002 ஆம் ஆண்டு முதல் 2005 வரை சன் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரை இயக்கியதும், அதில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததும் திரு. திருமுருகன் தான்.

இச்சிறந்த தொடரை இயக்கியதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற அவர், வெள்ளித்திரையிலும் தனது படைப்புகளை கொடுத்தார்.

Metti oli director Thirumurugan

எம்-மகன் திரைப்படத்தை இயக்கி தமிழக அரசின் சிறந்த திரைப்படத்துக்கான விருதை பெற்றார். அதன்பின் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தை பரத் உடன் இணைந்து இயக்கினார்.

இதையும் படியுங்க: திருமணத்தில் இணையும் அடுத்த நட்சத்திர ஜோடி… தீயாய் பரவும் தகவல்..!!

வெள்ளித்திரையிலிருந்து மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பிய திருமுருகன், நாதஸ்வரம், கல்யாண வீடு, தேனிலவு, குலதெய்வம் போன்ற வெற்றித் தொடர்களை இயக்கி மாபெரும் கலைச்சாதனையை எட்டினார்.

Metti Oli 2

தற்போது, அவர் புதிய ஒரு தொடரை இயக்கி வருவதாகவும், அதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், அவரது யூடியூப் சேனலில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மெட்டி ஒலி சீரியல் பார்ட் 2 என பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது.

  • veera dheera sooran movie director express his worst feeling on delay release ஆதரவில்லாம இருந்தேன், அந்த வலியை தாங்கிக்க முடியல- மனம் நொந்த விக்ரம் பட இயக்குனர்..