கல்யாணம் ஆன 10 மாதத்தில் குழந்தை : பிரபல நடிகரை திட்டிய எம்ஜிஆர்!
Author: Udayachandran RadhaKrishnan21 February 2025, 5:38 pm
திருமணமான 10 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகரை போன் பட்டி திட்டிய எம்ஜிஆர்.
சென்னையில் பிறந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கடின உழைப்போடு நுழைந்தவர் நடிகர் பாண்டியராஜன். ஆரம்பத்தில் பாக்யராஜ் உடன் பணியாற்றிய அவர், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்க: சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
பின்னர் கன்னிராசி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியராஜன், ஆண்பாவம் படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
10 மாதத்தில் குழந்தை பெற்ற பாண்டியராஜனுக்கு எம்ஜிஆர் அறிவுரை!
தொடர்ந்து பல படங்களில் நடித்த பாண்டியராஜன்,. 1986ல் பல்லவி என்பவரை திருமணம் செய்தார். மூன்று மகன்கள் உள்ள நிலையில் பாண்டியராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார்.
அதில், திருமணம் செய்ததும் 1987ல் மூத்த மகன் பிறந்தார். அப்போது செய்திதாளில் பாண்டியராஜன் ஆண் குழந்தை பிறந்தது என செய்தி வெளியானது.
இதை பார்த்த உடனே எம்ஜிஆர் எனக்கு போன்கால் செய்து, என்னடா ஆண் மகன் பிறந்திருக்கானாமே வாழ்த்துக்கள் என கூறினார். நான் ஷாக்காகி ரொம்ப நன்றி, நீங்க என் கல்யாணத்துக்கு வந்தீங்க நன்றி கூட சொல்லவே இல்ல என்று நான் சொன்னேன்.
உடனே அவர், கல்யாண்ம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு என கேட்டார். நான் 10 மாதம் என கூறினேன். உடனே எம்ஜிஆர், இந்த வேகத்தை மத்ததுலயும் காட்டு என கூறியதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.