எம்.ஜி.ஆர் அருண்மொழிவர்மனாக இந்த நடிகரை தான் நடிக்க வைக்க ஆசைப்பட்டாராம்..!
Author: Vignesh16 October 2022, 10:00 am
கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். உலக அளவிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது பொன்னியின் செல்வன்.
நாளுக்கு நாள் பொன்னியின் செல்வன் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மொத்தம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் போட்ட பணத்தை விரைவில் எடுத்துவிடும் என தெரிகிறது. தந்போது உலகம் முழுவதும் இதுவரை படம் ரூ.400+ கோடிக்கு மேல் வசூலை தாண்டியுள்ளது.
பொன்னியின் செல்வன் படம் ரிலீஸ் ஆகி 15 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 400+ கோடி வரை வசூலித்துவிட்டதாம். விரைவில் ரூ. 500 கோடியை எட்டிவிடும் என்கின்றனர். பொன்னியின் செல்வன் படம் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வசூலில் மாஸ் காட்டுகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் வசூல் கண்டிப்பாக ரூ.500 கோடியை எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தால் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. இதனால், பொன்னியின் செல்வன் படக்குழுவும் படு சந்தோஷத்தில் உள்ளார்கள்.
இப்படியே வசூல் எகிறிக்கொண்டே இருந்தால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிசில் பொன்னியின் செல்வன் புதிய உச்சத்தை அடையும் என தகவல் தெரிவிக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க பல்வேறு காலகட்டங்களில் முக்கிய பிரபலங்கள் பலரும் உருவாக்க நினைத்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
அப்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர் உருவாக்க நினைத்து, சிவகுமாரை தான் அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விரும்பினாராம்.
இதனை சிவகுமாரின் இரண்டாவது மகனான நடிகர் கார்த்தி சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.