வெறித்தனம் வெயிட்டிங்… தளபதி 68ல் வில்லனாகும் மைக் மோகன் – அரவிந்த் சாமி அதோகதி!

Author: Shree
9 October 2023, 7:29 pm

தமிழ் சினிமாவின் கமர்சியல் ஹீரோவான விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் .

இதில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாக உள்ளதால். குறிப்பாக சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் போன்று தளபதி 68 அரசியல் பேசும் படமாக அமையலாம் என எதிர்பார்க்கலாம்.

முன்னதாக இப்படத்தில் வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிக்க உள்ளார் என செய்திகள் வெளியானது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி இப்படத்தின் வில்லனாக பிரபல நடிகர் மைக் மோகன் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக இவருக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக் மோகனை பல வருடங்களுக்கு பிறகு திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!