சிறுவனிடம் சில்மிஷம்.. பார்க்கில் பயங்கரம் : லப்பர் பந்து நடிகரின் காமவெறி!
Author: Udayachandran RadhaKrishnan7 February 2025, 11:21 am
சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவனின் பெற்றோர் விருகம்பாக்கத்தில் அளித்த புகாரில், தனது மகன் பார்க்கிற்கு சென்ற போ, இளைஞர் ஒருவர் பேச்சு கொடுத்துள்ளார்.
நீ அழகா இருக்க, ஐ லவ்யூ டா என கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரை வைத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.
இதையும் படியுங்க: ஒரே இரவில் அந்தர்பல்டி அடித்த விக்கி.. கடுப்பான அஜித் ரசிகர்கள்!
அவர் பெயர் ஹரி என்றும், சினிமா, சின்னத்திரையில் துணை நடிகராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. விசாரணையில், பிரபல தொலைக்காட்சிகளில் பல தொடர்களில் பணியாற்றி வந்ததும், பூங்காவுக்கு வரும் சிறுவர்களிடம் பேச்சு கொடுத்து, ஐ லவ் யூ என கூறி அவர்களிடம் அத்துமீறுவது வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும் பல நடிகைகளோடு உல்லாசமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாததால் சிறுவர்களிடம் அத்துமீறியதாக வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

இவர் லப்பர் பந்து படத்தில் நடித்திருப்பதும், பல பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்நதுள்ளதும் தெரியவந்துள்ளது. பெண் பிள்ளைகளை தாண்டி தற்போது ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.