உன்பேர் சொல்ல ஆசைதான்.. மின்சார கண்ணா பட மோனிகா இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?..
Author: Vignesh8 February 2024, 5:10 pm
மின்சார கண்ணா 1999ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை கே. எஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விஜய், குஷ்பூ, ரம்பா, மோனிக்கா, மணிவண்ணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து இருந்தனர்.
நடிகர் விஜயின் திரைப்பயணத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படங்களில் ஒன்றான இப்படம். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். ஒரு சிறப்பு தோற்றத்திலும் நடித்திருப்பார்.
இப்படத்தில், தேவா இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களுமே நல்ல ஹிட் கொடுத்தது. விஜயை தாண்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை Monica Castelino. 90களில் கனவு கன்னியாக வலம் வந்த இவர். சில காலம் ,எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் போனது. இப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து, படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சரியாக பட வாய்ப்பு இல்லாமல் இவர் 2009 ஆம் ஆண்டில் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார்.
இடையில் சத்யபிரகாஷ் சிங் என்ற துணை இயக்குனரை திருமணம் செய்து கொண்ட இவர் ஒரே வருடத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு அவரையும் பிரிந்து விட்டார். தற்போது, சமூக வலைதளங்களில் இவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி மின்சார கண்ணா பட நடிகையா இது என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.