குறும்பா என் உயிரே நீதான் டா.. மிர்ச்சி செந்தில் மகன் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்..! (வீடியோ)
Author: Vignesh11 January 2024, 1:13 pm
ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் மிர்ர்ச்சி செந்தில். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் நடிகராக இடம் பிடித்தார்.
அதன் பின்னர் தவமாய் தவமிருந்து, மாப்பிள்ளை, பப்பாளி, வெண்நிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணன் தொடரில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே, வெப் தொடரிலும் நடிப்பது ரியாலிட்டி ஷோ என கலந்து கொண்டும் வருகிறார். தற்போது, செந்தில் மகன் தேவிடன் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்போது, எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வருகிறது.