மிர்ச்சி செந்தில் மகனா இது? தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வைரல்!

Author: Shree
13 November 2023, 6:27 pm

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணிபுரிந்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனவர் மிர்ர்ச்சி செந்தில். அதன் மூலம் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி இல்லத்தரசிகளின் பேவரைட் சீரியல் நடிகராக இடம் பிடித்தார்.

அதன் பின்னர் தவமாய் தவமிருந்து, மாப்பிள்ளை, பப்பாளி, வெண்நிலா வீடு போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவையே காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் மகன் மற்றும் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை மிர்ச்சி செந்தில் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ எல்லோரது கவனத்தையும் ஈர்த்து ” அட அவர் மகனா இது? அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்திட்டாங்களே என ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 403

    0

    0