அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் சிக்கிய 5 படங்கள்.. யாரா இருந்தா எனக்கென்ன.. தலைவர் படத்தை வச்சு செஞ்சுட்டாருல..!
Author: Vignesh8 August 2023, 5:45 pm
RJ-வாக தனது கேரியரை தொடங்கி, 12B திரைப்படத்தில் முக்கிய துணை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் மிர்ச்சி சிவா. இதனை தொடர்ந்து, சென்னை 600 028 மற்றும் சரோஜா திரைப்படங்கள் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அகில உலக சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் இவர் நடித்த ‘தமிழ் படம்’ பெரிய பிரபலம் கொடுத்தது.
மற்ற பிரபலங்களை படங்களை கலாய்க்கும் ரூட்டு தான் தனக்கு ஒர்க் அவுட் ஆகிறது என்பதை புரிந்து கொண்ட சிவா அதையே ஃபாலோ பண்ணி ஒரு சில படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களும் நல்ல ரீச்சை கொடுத்தன. சிவா கலாய்த்து தள்ளிய ஐந்து தமிழ் திரைப்படங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ் படம்
சிவா நடித்த தமிழ் படம் இயக்குனர் அமுதன் இயக்கத்தில் கோலிவுட்டில் இதுவரை யாரும் எடுக்காத புதிய முயற்சி என்று சொல்லலாம். ஒரு படம் முழுக்க இதுவரை ரிலீஸ் ஆன மொத்த தமிழ் படங்களையும் பங்கமாய் கலாய்த்து இருப்பார்கள். ரஜினி, கமல், அஜித், விஜய் தொடக்கி எம்ஜிஆர், சிவாஜி வரை பாரபட்சம் இல்லாமல் இந்த படத்தில் கலாய்த்து தள்ளி இருப்பார்கள்.
தமிழ் படம் 2
தமிழ் படம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 அதன் இரண்டாம் பாகமாக வெளியானது. 2015 க்கு பின் வந்த அத்தனை படங்களையும் மொத்தமாக வைத்து செய்துவிட்டார் சிவா. இந்த தமிழ் படம் 2வின் போஸ்டரிலேயே பாகுபலி படத்தை கலாய்ப்பது போல் லிங்கத்தை தூக்கும் பிரபாஸை இமிடெட் செய்து இருப்பார் மிர்ச்சி சிவா. இந்த படத்தில் சிவா பிரபல அரசியல் தலைவர் ஒருவரை பங்கமாய் கலாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தில்லுமுல்லு
1981 ஆம் ஆண்டு தில்லுமுல்லு ரிலீசானது. ரஜினி படத்தின் கதையை மையமாகக் கொண்டு 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் தில்லுமுல்லு 2. இந்த படத்தில் ரஜினியின் கேரக்டரில் சிவா நடித்திருப்பார். தேங்காய் சீனிவாசன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், சௌகார் ஜானகி கேரக்டரில் கோவை சரளாவும் நடித்திருந்தனர். இந்த படத்திலும் பங்கமாய் கலாய்த்து மெர்சி சிவா நடித்து இருந்தார்.
யா யா
இயக்குனர் ராஜசேகரன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் இயக்குனர் ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். இவர் இயக்கிய யா யா திரைப்படம் ஒரு முழு நீள நகைச்சுவை திரைப்படம் ஆகும். யா யா படத்தில் சிவா ராஜ்கிரன் என்ற தோணியாகவும், சந்தானம் ராமராஜன் என்ற சேவாக்கவும் படம் முழுக்க காமெடி காட்சிகளில் பங்கமாய் கலாய்த்து இருப்பார்கள்.
சுமோ
சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடிப்பில் இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சுமோ. இந்த படத்தில் யோகிபாபு மற்றும் விடிவி கணேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். படம் முழுக்க காமெடி காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.