வெளிய போகாதீங்க, குழந்தைனு நினைச்சு போலியோ சொட்டு மருந்து போட்டுருவாங்க : மிருணாளினி Cute Photos!!
Author: Udayachandran RadhaKrishnan27 February 2022, 2:35 pm
தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.
அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்றது.
எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது. இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் ஆரஞ்சு நிறத்தில் உடையை போட்டு ரசிகர்களை மூட்-ஐ மாற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வெளியே போயிறாதீங்க, உங்கள குழந்தைனு நினைச்சு சொட்டு மருந்து ஊத்திருவாங்க என கிண்டலடித்துள்ளனர்.