தனுஷை துவம்சம் செய்யப்போகும் அருண்விஜய் – போட்டியாக வெளிவந்த ‘மிஷன் சாப்டர் 1’ ட்ரைலர்!
Author: Rajesh6 January 2024, 5:46 pm
தமிழ் சினிமாவில் கிரீடம், பொய் சொல்லப் போறோம், மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, வனமகன், தலைவி ஆகிய வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ. எல் விஜய். இவர் தற்போது அருண் விஜய்யை வைத்து ‘மிஷன்’ சாப்டர் 1 – ‘அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
எமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வரும் ஜனவரி 12ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. அதே நாளில் தான் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் வெளியாக உள்ளது. எனவே அருண் விஜய் தனுஷுக்கு செம டஃப் கொடுப்பார் என பேசப்படுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் அருண் விஜய் தன்னுடைய மகளுக்காக மிகப்பெரிய போராட்டத்தை, கையில் எடுக்கும் தந்தையாக நடித்து மிரட்டியுள்ளார். இதோ அந்த ட்ரைலர் வீடியோ: