விஜயகாந்த், விஜய் படத்தில் 12 வயது இசையமைப்பாளர்;ஆச்சரியத்தில் திரையுலகம்,..

Author: Sudha
6 July 2024, 11:32 am

நாளைய தீர்ப்பு விஜயகாந்த் மற்றும் விஜய் நடிக்க எஸ். ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் வெளிவந்த திரைப்படம். மணிமேகலையின் இசையில் பாடல்கள் வெளிவந்தது.இது விஜய்யின் முதல் திரைப்படம்.

மணிமேகலை இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க தேர்ந்தெடுக்க பட்ட போது அவருக்கு வயது 12.அவருடைய முழுப்பெயர் மணிமேகலை ஶ்ரீ லேகா இவர் தெலுங்கின் முன்னணி இயக்குனரான எஸ் எஸ் ராஜமௌலி மற்றும் தமிழில் மரகதமணி யாக அறியப்பட்ட எம் எம் கீரவாணி ஆகியோருக்கு உறவினர்.2022 ஆம் ஆண்டு இவர் இசையில் ஹிட்: த செகண்ட் கேஸ் திரைப்படம் வெளிவந்து கமர்சியல் ரீதியாக வெற்றி பெற்றது.

அவர் இந்திய தெலுங்கு திரைப்படத் துறையில் இருக்கும் ஒரே பெண் இசையமைப்பாளர்.இசைத் துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் எம் எம் ஶ்ரீ லேகா.

அவரது தந்தைவழி மாமா வி விஜயேந்திர பிரசாத் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.

தனது திரை அறிமுகம் பற்றி குறிப்பிடும் போது என் மாமா விஜயேந்திர பிரசாத் அவர் எங்கு சென்றாலும், நான் அவருடன் செல்வது வழக்கம்.ஒரு நாள் அவர் தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதை சொல்லச் சென்று கொண்டிருந்தார், நான் என்னுடைய கீபோர்டை எடுத்துக்கொண்டு அவருடன் சென்றேன். என் மாமா தனது கதையை விவரித்த பிறகு, அங்கு இருந்த திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், என்னைப் பற்றி விசாரித்தனர். என்னுடைய இசைத்திறனை சோதிக்க என்னிடமிருந்து ஒரு பாடலைக் கேட்க அவர்கள் விரும்பினர்கள். அன்று நான் 20 பாடல்களைப் பாட வேண்டியிருந்தது.

‘நாளைய தீர்ப்பு’ (1992) படத்தின் மூலம் இயக்குனர் தனது மகனான விஜய் அவர்களையும் முன்னணி நடிகராக அறிமுகப்படுத்த எண்ணியிருந்தார். என்னுடைய அறிமுகமும் அந்த படத்தில் நிகழ்ந்தது என சொன்னார்.

8 வயதில் ஶ்ரீ லேகா இசையமைத்த ஒரு பாடல் சிரஞ்சீவி மற்றும் ஶ்ரீதேவி இணைந்து நடித்த எஸ் பி பரசுராம் படத்தில் பயன்படுத்தப் பட்டது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…