அந்த கலவரத்திற்கு மோடிதான் பொறுப்பு- சர்ச்சையை கிளப்பி வரும் ஆமிர்கான் பேட்டி…

Author: Prasad
5 April 2025, 2:24 pm

டாப் நடிகர்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆமிர்கான். இவர் தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் உதவி இயக்குனராகவும் தனது சினிமா கெரியரை தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு “கியாமத் சே கியாமத் டக்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற அதனை தொடர்ந்து தற்போது வரை பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து பாலிவுட்டின் டாப் நடிகர்களுக்கு மத்தியில் முன் வரிசையில் உள்ளார் ஆமிர்கான். 

modi was the responsible for gujarat riot said by aamir khan

சர்ச்சையை கிளப்பி வரும் பேட்டி

இந்த நிலையில் 2000ங்களில் ஆமிர்கான் அளித்த பேட்டி ஒன்று திடீரென இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்பேட்டியில் ஆமிர்கான் 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை பற்றி பேசுகிறார். அதில் “குஜராத்தில் நடந்த சம்பவத்திற்கு மோடிதான் பொறுப்பேற்க வேண்டும். இந்து முஸ்லிம் கிறுஸ்துவர்கள் என இதை பார்க்காமல் அங்கு இந்தியர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள் என்றே இதனை பார்க்க வேண்டும். இந்த கலவரத்திற்கு காரணமானவர்கள் மனிதத்திற்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் எதிரானவர்கள். இந்த கலவரத்திற்கு மோடியும் அவரது கட்சியும்தான் பொறுப்பேற்கவேண்டும்” என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார். 

ஆமிர்கானின் இந்த பேட்டி திடீரென இணையத்தில் வைரலாகி வருகிறது. 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தில் ஹிந்து முஸ்லீம் பிரிவைச் சேர்ந்த 1000  பேர்களுக்கு மேல் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர். அந்த சமயத்தில் குஜராத்தின் முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமரான மோடி.

ஆமிர்கான் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக ஒரு தகவல் வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் பாலிவுட்டில் ஆமிர்கானை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?
  • Leave a Reply

    Close menu