படம் ரிலீஸ் ஆக 25 வருடங்கள் காத்திருந்த சூப்பர் ஹீரோ; முடிவில் நடந்தது என்ன?..

Author: Sudha
5 July 2024, 2:32 pm

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகர் மோகன்லால்.அவருடைய முதல் திரைப்படம் 1980 இல் வெளிவந்த மஞ்சில் விரிஞ்ச பூக்கள்.திரைப்படம் வெளியாகும் போது மோகன்லாலின் வயது 20.

ஆனால் இந்த திரைப்படத்திற்கு முன்பே திரனோட்டம் என்ற திரைப்படத்தில் 1978 ஆம் ஆண்டு நடித்திருந்தார் நடிகர் மோகன்லால். அசோக் குமாரால் தயாரிக்கப்பட்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், மணியன்பிள்ளை ராஜு மற்றும் ரவிக்குமார் நடித்த மலையாளத் திரைப்படம். படத்தில் குட்டப்பன் என்கிற மனநலம் குன்றிய வேலைக்காரனாக நடித்தார்.படம் முடிவடைந்து தணிக்கை செய்யப்பட்டது, ஆனால் வெளியிடப்படவில்லை.

மோகன்லாலின் முதல் படப்பிடிப்பு 4 செப்டம்பர் 1978 அன்று காலை 11:30 மணிக்கு கேசவதேவ் சாலையில், முடவன்முகலில் உள்ள மோகன்லால் வீட்டின் முன் நடந்தது. மோகன்லால் மற்றும் அவரது நண்பர்களால் உருவாக்கப்பட்ட படம்.

பின்னர் இந்திய ஜனாதிபதியின் அனுமதியுடன் 25 வருடங்களுக்கு 2005 ஆம் ஆண்டு கொல்லம் திரையரங்கில் வெளியிடப்பட்டது.அதற்குள் மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக மாறிஇருந்தார் மோகன்லால்.

  • Allu Arjun bouncer arrested அல்லு அர்ஜுன் பவுன்சர் திடீர் கைது… திரையரங்கில் செய்த செயல்..வெளிச்சத்திற்கு வந்த உண்மை..!
  • Views: - 164

    0

    0