டாப் நடிகருடன் மாலையும் கழுத்துமாய் கீர்த்தி சுரேஷ் – BMW கார் பரிசாக கொடுத்த பிரபலம்!
Author: Shree7 April 2023, 11:33 am
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக தசரா படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் நேற்று வெளியான இப்படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கியிருந்தார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் வசூல் ஈட்டி வருகிறது. தசரா திரைப்படத்தின் மூலம் நானிக்கு முதல்முறை ரூ.100 கோடி வசூலைக் கொடுத்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக இயக்குநருக்கு BMW காரை பரிசாக வழங்கியுள்ளார் தாயாரிப்பாளர்.
இந்நிலையில் இந்த வெற்றியை படக்குழுவினர் ஒன்றுகூடி கொண்டாடிய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதிலும் ஒரே மாலையை நானியும் கீர்த்தி சுரேஷும் ஜோடியாக அணிந்திருப்பதை பார்த்து சிறந்த ஜோடி என ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.