கேரளா செல்லும் கும்பமேளா மோனாலிசா…பறந்து வந்த அழைப்பால் குஷியில் வீடியோ.!

Author: Selvan
13 February 2025, 8:18 pm

சிறப்பு விருந்தினராக செல்லும் மோனாலிசா

உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வருடம் மகா கும்பமேளா பிரம்மாண்டமாக ஜனவரி 13 ஆம் தேதியில் இருந்து தொடங்கி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்க: எல்லாமே இசை தான்…நீதிபதியின் கேள்விக்கு இளையராஜா நச் பதில்..!

இந்த நிகழ்வில் மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் ஒருவரின் புகைப்படம் படுவைரல் ஆனது.இவர் தனது குடும்பத்துடன் மாலை,பாசி மணிகள் விற்றுக்கொண்டிருந்தார்.அவரது தோற்றம் மற்றும் அழகான கண்கள் மூலம் அங்கே வருகின்ற அனைவரையும் தன் பக்கம் இழுத்தார்,இதனால் அவரை பேட்டி எடுக்க பலரும் அணிதிரண்டனர்,குறிகிய நாளில் பட்டி தொட்டி எங்கும் மோனாலிசா புகைப்படம் படுவைரல் ஆனது.

Monalisa invited to Kerala jewelry launch

இதனை பார்த்த பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய புதுப்படத்தில் நடிக்க அவரை அழைத்துள்ளார்.இதனால் சினிமாவில் விரைவில் நடிக்க இருக்கும் மோனாலிசாவிற்கு,தற்போது கேரளாவில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது,அதாவது பிரபல தொழிலதிபரான பாபி செம்மனுக்கு சொந்தமான நகைக்கடையை திறந்து வைக்க மோனாலிசாவை அழைத்துள்ளார்,நாளை (பெப்ரவரி 14) கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கடை திறக்கப்படவுள்ளது.மோனாலிசா வருகையை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்து உள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி பலரையும் கவர்ந்து வருகிறது.

  • Thaman viral interview கசப்பான முடிவை எடுத்த இசையமைப்பாளர் தமன்…அந்த பெண் தான் காரணமா..!
  • Leave a Reply