வைரல் பொண்ணுக்கு வைர நெக்லஸ்…ரசிகர்கள் வெள்ளத்தில் மோனாலிசா.!

Author: Selvan
15 February 2025, 2:05 pm

அதிர்ஷ்ட மழையில் நனையும் மோனாலிசா

உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்பமேளா விழாவில் மோனலிசா என்ற பெண்மணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆனதையடுத்து,அந்த பெண்மணியை பேட்டி எடுக்க பலரும் திரண்டு சென்றார்கள்.

இதையும் படியுங்க: ‘இனிமேல் எல்லாமே நீ தான்’…வைரலாகும் திரிஷா பதிவு..!

12 வருடங்களுக்கு பிறகு நடக்கும் இந்த மகா கும்பமேளா திருவிழாவில்,தனது பெற்றோருடன் பாசி,மணி மாலை விற்று கொண்டிருந்த இந்தூரை சேர்ந்த மோனாலிசாவின் தோற்றம் மற்றும் கண்கள் பலருடைய கவனத்தையும் ஈர்த்தது.

Monalisa Kerala event

இதனால் அவரது கண்ணை பலரும் காந்த கண்ணழகி என கூறி வந்தனர்,இணையத்தில் அந்தப்பெண் வைரல் ஆனதையடுத்து,பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தன்னுடைய படத்தில் நடிக்க வைப்பதாக கூறினார்,இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொழிலதிபரான பாபி செம்மனுருக்கு சொந்தமான புது நகைக்கடையை திறந்து வைக்க அவரை அழைத்தார்.இதற்கான வீடீயோவையும் இன்ஸ்டாவில் பகிர்ந்தார்.

அதன்படி நேற்று (பெப்ரவரி 14) கேரளா கோழிக்கோடு சென்ற மோனாலிசாவை காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது,அவருக்கு சிறப்பான மரியாதை கொடுத்த பாபி செம்மனுர்,தனது நகை கடையை திறந்த பிறகு,அவருக்கு வைர நெக்லஸை பரிசாக அளித்தார்,அதன் பிறகு அங்கிருந்த ரசிகர்கள் முன்னிலையில் மோனாலிசா சில வார்த்தைகள் மலையாளத்தில் பேசினார்.

தற்போது இந்த வீடீயோவை நெட்டிசன்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

  • Famous actor who physically assaulted Aishwarya Rai ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!