100 கோடி சிக்கலில் நயன்தாரா.. சுந்தர்.சியின் 13 வருட கதை கைகொடுக்குமா?

Author: Hariharasudhan
10 February 2025, 1:42 pm

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் 100 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: ‘மதகஜராஜா’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களுக்கு சுந்தர்.சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, முன்பே ஒப்பந்தமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் கதையின் விவாதப் பணிகளும் முடிவு பெறும் நிலையில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தினை 100 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 எப்போது தொடங்கும், யாரெல்லாம் அதில் நடிக்கின்றனர் என்பது இதுவரை முடிவாகவில்லை.

காரணம், அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகம் போலவே, அம்மனாக நயன்தாரா மட்டும் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும், விரைவில் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nayanthara in Mookuthi amman 2

முன்னதாக, ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பில் ஊர்வசி, நயன்தாரா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இதில் நாயகனாக மட்டுமன்றி, ஆர் ஜே பாலாஜி இயக்கியும் இருந்தார். இதன் மாபெரும் வரவேற்பால், தற்போது அதன் இரண்டாம் பாகமும் உருவாகிறது.

இதையும் படிங்க: பிரபாகரனே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நானும் என் தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் : சீமான்!

ஆனால், மூக்குத்தி அம்மன் 2 படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்காமல் சுந்தர்.சி இயக்க உள்ளார். மேலும், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக சொர்க்கவாசல் என்ற படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

  • Bharathiraja son Manoj death பெரும் சோகத்தில் ‘பாரதிராஜா’ குடும்பம்…கண்ணீரில் திரையுலகம்.!
  • Close menu