சினிமாவில் நாளுக்கு நாள் புது புது பாடகர்கள்,பாடல்களை பாடி வருகின்றனர்.
டி.எம்.எஸ்., பி.பி ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி., கே.ஜே.யேசுதாஸ்,உன்னி கிருஷ்ணன் என்று ஒவ்வொரு தலைமுறைக்கும் புகழ்பெற்ற பாடகர்கள் இன்றுவரை வரலாற்றில் நீடித்து கொண்டு தான் இருக்கின்றனர்.
பாடகர் ஸ்ரீ ராம்
அந்த வகையில் 1995 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பலரையும் தனது பாடல் மூலம் முணுமுணுக்க வைத்தவர் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஸ்ரீ ராம்.
நிறைய பேருக்கு இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இவருடைய பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கின்றன.அந்த அளவுக்கு இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ஹை பிட்ச் ஹிட் பாடல்கள்.
உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா.. தைய்யா,சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா,மாயாவி படத்தில் தமிழ்நாட்டில் எல்லோருக்கும்,மன்மதன் படத்தில் வானம்னா உயரம் காட்டும்,சண்டைக்கோழி திரைப்படத்தில் முண்டாசு சூரியனே கோவில் படத்தில் அரளி விதையில் போன்ற பாடல்கள் இன்றைக்கும் ஸ்பீக்கர்களை அலறவிட்டுட்டு தான் இருக்கின்றன.
இசை பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்ததால் சங்கீதம்,புல்லாங்குழல் போன்றவற்றையும் கற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்க: உள்ளாடையை திருடி பிரபல நடிகை செய்த அநாகரீக செயல் : கேவலத்தின் உச்சம்!
இவர் குரலில் மேலும் சில பாடல்கள்
படையப்பாவில் வெற்றிக்கொடிக்கட்டு,யுவன் இசையில் மன்மதன் பாடல்,தாஜ்மஹால் படத்தில் திருப்பாச்சி அருவாளை,என் சுவாசக் காற்றே படத்தில் இடம்பெறும் ஜில்லல்லவா,பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ராட்சச மாமனே பாடலில் கார்த்தி வரும் காட்சி போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார் பாலக்காடு ஸ்ரீ ராம்.இவருடைய பாடல்கள் அனைத்தும் எல்லோராலும் கொண்டாட கூடியதாக இருக்கிறது .
ரெண்டு மூணு ஹிட் பாடல்களை பாடிவிட்டு சமூக வலைத்தளங்களில் பெருமை பீத்தி கொள்ளும் நபர்கள் மத்தியில் பாலக்காடு ஸ்ரீ ராம் இருக்குற இடமே தெரியாமல் இருப்பது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
2
0