உலக அழகிக்கு டார்ச்சர் கொடுத்த மாமியார்….விவாகரத்து உண்மைதான்!

Author:
26 July 2024, 1:53 pm

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தில் இருந்து வரும் அந்த அழகிய நடிகை உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் சினிமாவிற்கு அறிமுகமானார். அவரை அறிமுகம் செய்து வைத்தது முதன் முதலில் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். தமிழ் படத்தின் மூலமாக சினிமா துறைக்கு அறிமுகமாகி இருந்த அந்த உலக அழகி நடிகை பாலிவுட் சினிமாவிற்கு சென்று அங்கு தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து தனக்கான அந்தஸ்தையே பிடித்தார்.

பாலிவுடில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து வந்த அவர் ஹிந்தி திரையுலகில் நட்சத்திர குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரும் பணக்கார வீட்டில் மருமகளாக சென்ற அந்த உலக அழகிக்கு திருமணமான புதிதிலிருந்தே மாமியார் கொடுமை தாங்க முடியவில்லை .அதை எப்படியோ சமாளித்து வந்து விட்டார்.

கணவர் துணையாக இருந்த காரணத்தினால் மாமியார் பிரச்சனை எல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். ஆனால், சமீப நாட்களாக அவருடைய கணவர் முகம் கொடுத்து கூட பேசுவதில்லை. மேலும் அவர் உடல் பருமன் அதிகரித்து விட்டதால் அதனை கேலியும் கிண்டலுமாக மாமியார் அடிக்கடி குத்தி காட்டுகிறாராம்.

இதெல்லாம் பெரிய பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து அழகு நடிகை தனது மகளுடன் தனது அம்மா வீட்டிற்கு சென்று வசித்து வருவதாக செய்திகள் கூறுகிறது. நடிகையின் கணவரோ விவாகரத்து செய்ய முன்வந்தாலும் கூட இப்போது விவாகரத்து செய்து கொள்ள வேண்டாம். மகள் வளர்ந்து பெரிய பெண்ணாக ஆன பிறகு விவாகரத்து அறிவித்துக் கொள்ளலாம். அதுவரை நாம் தனித்தனியே இருவரும் பிரிந்து வாழலாம் என முடிவெடுத்து விட்டதாக தகவல்கள் கூறுகிறது. அவ்வப்போது வதந்தியாக வெளிவந்து கொண்டிருந்த இந்த நட்சத்திர ஜோடியின் விவாகரத்து விஷயம் தற்போது உண்மைதான் என்பதை இதன்மூலம் நிரூபித்து விட்டது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?