ஒரு வழியாக முடிவுக்கு வந்த சீரியல்..! வெளிவந்த கடைசிநாள் படப்பிடிப்பு புகைப்படம்..!

Author: Vignesh
27 February 2023, 5:30 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial - updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

mouna ragam 2 - updatenews360

இந்நிலையில், விஜய் டிவியில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் வெற்றிகரமான ஒளிபரப்பாகின்றன. இதனிடையே, இளைஞர்களை கவரும் தொடர்கள், வீட்டுப் பெண்கள் பார்ப்பது போல் கதையுள்ள தொடர்கள் என ஒளிபரப்பாகி வருகின்றன.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதாவது மாலை ஒளிபரப்பாகும் மௌன ராகம் 2 தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது.

mouna ragam 2 - updatenews360

இதைக்கேட்ட ரசிகர்கள் நல்லாதானே ஓடிட்டு இருக்கு ஏன் முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது இன்று மௌன ராகம் 2 தொடரின் கடைசிநாள் படப்பிடிப்பு தள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சீக்கிரம் ஏன் முடித்தீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Ajithkumar Vidaamuyarchi box office in Bihar பீகாரில் மாஸ் காட்டும் விடாமுயற்சி.. தவிடுபொடியாகும் முந்தைய சாதனைகள்!