அஜித் ஒரு Fraud.. தொந்தி-ய காட்டி நடிப்பான்..- ஒருமையில் அசிங்கமாக பேசிய பிரபலம்..!

Author: Vignesh
3 July 2023, 5:30 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்தை பலரும் ஆஹா ஓஹோன்னு என்று புகழ் பேசி தான் நாம் எல்லோரும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித்தை குறித்து அடுக்கடுக்கான புகார் கூறி பேரதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

தமிழில் கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, கமல் ஹாசனின் வேட்டையாடு விளையாடு, வித்தகன் போன்ற படங்களை தயாரித்தவர் தான் மாணிக்கம் நாராயணன். இவர் தற்போது அஜித் குமார் என்று ஒரு நடிகர் இருக்காரு, அவருக்கு நடிக்கவே தெரியாது ஆனால், வாழ்க்கையில் நல்லா நடிப்பாரு என விமர்சித்து பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும் மகிழ்திருமேனி பற்றி பேசிய அவர், அவரை பற்றி உண்மை அனைத்தையும் சொல்ல முடியாது. அவர் எனக்கு பண்ணதுக்கு எந்த கமெண்ட்டும் அடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து இப்படி பேசுவது இது முதன் முறை அல்ல, இவர் ஏற்கனவே 2021ம் ஆண்டு அஜித் என்னிடம் என்னுடைய அப்பா அம்மா சிங்கப்பூர் போக வேண்டும் என சொல்லி கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் கடனாக வாங்கிவிட்டு ஏமாற்றினார். அந்த பணத்தை கேட்டபோது உங்க தயாரிப்பில் நடித்து கொடுக்குறேன் அந்த படத்தை ஈடு செஞ்சிக்கலாம் என்றார்.

பின்னர் அவள் வருவாளா திரைப்படத்தை நான் தயாரிப்பதாக இருந்தேன். அதற்காக அஜித்திற்கு ரூ. 12 லட்ச ரூபாயை கொடுத்தேன். ஆக மொத்தம் ரூ. 18 லட்சத்தை வாங்கிவிட்டு என்னை ஏமாற்றைவிட்டார். கேட்டால் நான் உங்களிடம் பணமே வாங்கவில்லை என கூறிவிட்டார்.

நான் ரூ. 2 லட்சம் கொடுத்ததற்கான ஆதாரத்தை வைத்திருக்கிறேன். நீ எத்தனை கோடி சம்பாதிக்கிற என் பணத்தை கொடுடா, ஏண்டா இப்படி ஏமாத்தறீங்க. எனக்கு நீ படம் பண்ணி தர வேண்டாம்டா என் பணத்தை கொடுடா என்று புலம்பித் தள்ளியிருந்தார். அப்போவே அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில், தற்போது மீண்டும் அஜித்துக்கு சினிமாவில் தொந்தியைத் தான் காட்டி நடிக்க தெரியும் என்றும், அஜித் சரியான Fraud அந்தாள் என ஒருமையில் எல்லாம் மாணிக்கம் நாராயணன் அஜித்தை திட்டி உள்ளார். இவை அஜித் ரசிகர்களுடைய கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ajith shalini - updatendews360

தற்போது அஜித் குறித்து பேசியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அஜித்தை ஒரு தயாரிப்பாளர் இவ்வளவு மோசமாக திட்டியுள்ளதை பார்த்து விஜய் ரசிகர்கள்… இதுக்கு மேல யாரும் கேவலபடுத்த முடியாது என கிண்டல் அடித்து சிரித்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.

  • vijay famous dialogue what bro spoke by ajith in good bad ugly movie “வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?