M.R.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டார்?.. – உண்மையை வெளிப்படையாக கூறிய ராதா ரவி..!

Author: Vignesh
3 June 2023, 6:15 pm

சினிமாவில் எத்தனையோ சம்பவங்கள் மறைமுகமாக நடந்திருந்தாலும் அதற்கு சரியான தீர்வு காணாமல் கண்ணும் காதுமாய் வைத்து மறைத்து விடுவார்கள். அப்படித்தான் நடிகரும் அரசியல்வாதிமான MGR-ஆரின் துப்பாக்கி சூடு சம்பவம் என்ன ஆனது என்று இதுவரை யாரும் அறியாத சம்பவமாக 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்டு உள்ளது.

mgr-mr-radha-updatenews360

அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர் ராதா நெருங்கிய நண்பர்களாக இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருக்கும பொழுது ஏன் திடீரென்று MR ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பது இன்றுவரை பலருக்கும் பெரிய குழப்பமாகத்தான் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவரையும் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேருமே உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

mgr-mr-radha-updatenews360

இதனையடுத்து, போலீசார் விசாரணையில் அவர்களுக்குள் இருந்த பல பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடந்தபட்டதாக வழக்கு ஆரம்பித்து MR ராதாவுக்கு ஐந்தாண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இவரிடம் கேட்டபோது அதற்கு நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார்.

mgr-mr-radha-updatenews360

MR ராதாவிடம் ஏன் நீங்கள் MGRரை சுட்டீர்கள் என்று கேட்டதற்கு ஏன் நான் சுட கூடாதா நானும் எம்ஜிஆரும் நண்பர்கள் தான் என்றும், புருஷன் பொண்டாட்டி சண்டை போடறது இல்லையா, அண்ணன் தம்பிக்குள் சண்டை வருது இல்லையா அதே மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டோம் என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

mgr-mr-radha-updatenews360

மேலும் அவர், என்ன கத்தி இருந்தா கத்தி சண்டை, கம்பு இருந்தா கம்பு சண்டை, எங்களுக்கு அந்த ரெண்டும் இல்லாததால் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது என்று பதில் கொடுத்து உள்ளார். அதனால் துப்பாக்கி சண்டை போட்டுக்கிட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டேன் என்றும், இது ஒரு பெரிய விஷயமா பேசிக்கிட்டு குத்தம் கண்டுபிடிக்கிறீங்க போவீங்களா என்று நக்கலாக பேசிட்டு ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்.

mgr-mr-radha-updatenews360

இதனையடுத்து, கொஞ்ச நாட்கள் கழித்து பெரியார் இறப்பிற்கு பரோலில் வந்த MR ராதா, MGR ரை பார்த்து என்ன ராமச்சந்திரா எப்படி இருக்கிறாய் என்று கேட்டு என்ன அரசியலில் போய் சேரப் போகிறாயா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு MGR ஆமா அண்ணன் என்று தெரிவித்திருக்கிறார்.

mgr-mr-radha-updatenews360

இதனிடையே, உடனே அங்கு இருந்தவர்கள் மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்திடக் கூடாது என்று இவரையும், கைதாங்களா கூப்பிட்டு வரும்போது நக்கலாக MR ராதா இன்னும் இரண்டு குண்டு சேர்த்தே சுட்டிருக்கலாமோ என்று கிண்டல் அடித்து இருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ராதா ரவி பல விசயங்களை தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அப்பா புரட்சி தலைவரின் நெருங்கி நண்பர் என்றும், வாசு என்ற தயாரிப்பாளர் தன் அப்பாவிடம் 1 லட்சம் பணமும் எம் ஜி ஆரின் கால்ஷீட்டையும் கேட்டு பெற்றுக்கொண்டார். பெற்றால் தான் பிள்ளை படம் எங்க அப்பாவுக்கு 100வது படம் என்றும், ஆலந்தூர் சேட்டிடன் தங்களுடைய தோட்ட பத்திரத்தை வைத்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

m r radha-updatenews360

அதன்பின் அந்த பணத்தை வாசு தானே தரவேண்டும், அப்போது எம் ஜி ஆர், தான் தருகிறேன் என்று கூறினார். 1967ல் தன் அப்பா எம் ஜி ஆரை சுட்டுவிட்டு ரத்தக்கரையுடன் போலிஸ் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அப்போதைய ஆட்சி மாறியதால் தன் அப்பா கொடுத்த புகார் மறைக்கப்பட்டது. தன் அப்பா தான் தான் சுட்டேன்னு சொன்னார்.

radharavi - updatenews360

ஒரு ஷாட் மண்டையை தெரித்துக்கொண்டது, இன்னொரு ஷாட் கழுத்தில் எப்படி வந்தது. அதன்பின், 7 வருடம் என்பது 3 வருஷமாகி வெளியில் வந்தார். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்ததால் தன் அப்பா வெளியில் வந்தார். இல்லை என்றால் உள்ளையே முடித்திருப்பார்கள் என்று ராதா ரவி தெரிவித்துள்ளார். இனிமேல் யாராக இருந்தாலும், எம் ஆர் ராதா எம்ஜிஆரை ஏன் சுட்டார் என்று எழுதாதீர்கள் என்று தெரிவித்து உள்ளார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!
  • Close menu