அப்பா, அம்மா…. மிருணால் தாக்கூரின் அழகான குடும்ப புகைப்படம் இதோ..!
Author: Vignesh4 May 2024, 10:25 am
பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.
மேலும் படிக்க: ஆள விடுங்கடா சாமி என்று தெறித்து ஓடிய 22 வயது நடிகை.. 40 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடும் விஜய்..!(Video)
தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.
மேலும் படிக்க: “ரங்கு ரக்கர” பாடலுக்கு என்னவொரு குத்து.. படு கவர்ச்சியான உடையில் ஷிவானி நாராயணன்..!(Video)
அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், இந்நிலையில், மிருணால் தாக்கூர் தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரன் மற்றும் சகோதரியுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.