அஜித்தை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர் – மின்னல் வேகத்தில் மார்க்கெட் பிடிச்சிட்டாங்க!

Author: Rajesh
14 February 2024, 5:35 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

mrunal thakur - updatenews360

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

ajith mrunal thakur

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர். குறிப்பாக தென்னிந்திய சினிமாவான கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ஏகே63 படத்தில் மிருணாள் கமிட் ஆகியிருப்பதாக செய்திகள் வெளியானது.

sivakarthikeyan-updatenews360

அதையடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக SK23 படத்தில் மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என கூறப்படுகிறது. இப்படத்தை ஏ. ஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார். அதுமட்டுமின்றி சிம்புவின் 48-வது படத்திலும் மிருணாள் தாகூர் முக்கியமான ரோலில் நடிக்கிறான். தொடர்ந்து அஜித், சிவகார்த்திகேயன் , சிம்பு என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் ஸ்ட்ராங்கான இடத்தை பிடிக்கவுள்ளார் மிருணாள் தாகூர்.

தான் நாயகி என்றும் அவரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்திவிட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இப்படத்தில் நடிகை தபுவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!