சட்டியுடன் அந்த அழகை ஒப்பிட்ட ஆசாமி…. தக்க பதிலடி கொடுத்த மிருணாள் தாகூர்!

Author: Shree
11 November 2023, 1:23 pm

பாலிவுட் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை மிருணால் தாக்கூர். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து சீரியல் நடிகையாக தனது கெரியரை ஆரம்பித்த மிருணாள் குங்கும் பாக்யா தொடரில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார். அந்த சீரியல் தான் தமிழில் இனிய இருமலர்கள் என டப் செய்யப்பட்டு வெளியானது.

mrunal thakur - updatenews360

தமிழிலும் சூப்பர் ஹிட் அடித்து கோலிவுட் ரசிகர்களின் பரீட்சியமான முகமாக தென்பட்டார். தொடர்ந்து சில தொடர்களில் நடித்து வந்த அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர இந்தியில் 2018ல் வெளியான லவ் சோனியா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

அதையடுத்து லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் நடித்து விமர்சனத்திற்கு உள்ளாகினார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க பிசியாக நடித்து வரும் மிருணாள் தாகூர், சமீபத்தில் இறுக்கமான உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதை பார்த்த நெட்டிசன்ஸ் அவரை விதவிதமாய் வர்ணித்திருந்தனர்.

அப்படி ஒருவர், அவரின் பின்னழகு ” சட்டி பானை போன்று ஷேப்பாக இருக்கிறது என கூறி கமெண்ட்ஸ் செய்திருந்தார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள மிருணாள் தாகூர், உங்கள் வர்ணனைக்கு நன்றி நண்பரே, ஒருவர் ஆரோக்கியமாக இருக்க எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமென்று உங்களுக்கு தெரியுமா? எல்லாருக்கும் ஒவ்வொரு உடல் வடிவம் இருக்கிறது, இது என் உடல் வடிவம். நான் அதிகமாக உழைக்க வேண்டியது கிடையாது. எனக்கிருப்பது போன்று பின்னழகு வேண்டும் என்று பலர் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், அது சிலருக்கு இயல்பாக அமைந்துவிடுகிறது. அதனால் என் அழகை நான் காட்டுகிறேன், நீங்களும் காட்டுங்கள் என்று மிகவும் கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

  • Rajinikanth Jailer 2 announcement ரஜினியின் தரமான சம்பவம் LOADING …தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட மிரட்டல் வீடியோ…!