பேசினா சான்ஸ் கேட்பாங்கன்னு ஒதுங்குறாங்க… அதனால் தான் அஜித்…. சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகர்!

Author: Shree
1 June 2023, 8:49 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கிக்கொண்டிருக்கும் அஜித் குடும்பத்தின் ஏழ்மை காரணமாக மெக்கானிக் வேலை செய்துவந்தார். அங்கேயே கார், பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். அப்போது பார்ப்பதற்கு அழகாக இருந்த அஜித்திற்கு மாடலிங் செய்ய வாய்ப்புகள் கிடைக்க நிறைய விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சில காட்சிகளில் நடிக்க திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

இதில் வரும் வருமானம் மூலம் தனக்கு விருப்பமான மெக்கானிக் தொழிலை சொந்தமாக ஆரம்பிக்கலாம் என்று எண்ணி இதனை செய்ய ஆரம்பித்தார். பின்னர் சினிமாவே வாழ்க்கையாகிவிட்டது. அஜித்தை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் தான். தமிழில் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிகர் என்பதையும் தாண்டி தற்போது கூட அஜித், கார் ரேஸ், பைக் டூர் என பிசியாக தனக்கு பிடித்த விஷயங்களை செய்து மகழ்ச்சியாக இருந்து வருகிறார். அஜித் படங்களில் நடிப்பதோடு சரி அதன் பின்னர் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலோ, விளம்பரங்களிலோ தலைகாட்டாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார்.

அவ்வளவு ஏன் அவர் நடிக்காத படத்திற்கே அவர் விளம்பரம் செய்ய மாட்டார். பெரிதாக யாருடன் தேவையில்லாத விஷயத்தை பற்றியெல்லாம் மூக்கை நுழைக்கவே மாட்டார். திரைத்துறையை சார்ந்தவர்களை ஏதேனும் சுபகாரியங்களில் சந்தித்தால் கூட ” ஹாய்… ஹலோ எப்படி இருக்கீங்க? என கேட்டுவிட்டு அமைதியாக இருப்பார்.

இது குறித்து பிரபல குணசித்திர நடிகர் எம். எஸ் பாஸ்கர் பேட்டி ஒன்றில், ஆம், அஜித் விஜய் இருவருமே அப்படித்தான் இருப்பார்கள். யாரிடமும் அதிகமாக பேசமாட்டார்கள். அப்படி பேசினால் தலைமேல ஏறி உட்கார்ந்துப்பாங்க… அதன் பின்னர் எனக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க கேட்பாங்க… எதுக்கு இதெல்லாம். அதனால் தான் மற்றவர்களிடம் பேச்சை குறைத்துக்கொள்வார்கள் என கூறியிருக்கிறார். இதனால் அஜித் அப்படி நடந்துக்கொள்கிறாரா? என ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி