ரஜினிக்கு பிறகு அவர்தான்.. கிரிக்கெட் வீரர் தோனியின் மனதில் இடம்பிடித்த கோலிவுட் நடிகர்..!

Author: Vignesh
18 July 2024, 4:29 pm

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட்டையும் இந்திய மக்களையும் பிரிக்கவே முடியாது. எந்த விளையாட்டிற்கு ஆதரவு தருகிறார்களோ இல்லையோ கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரிய ஆதரவு தருவார்கள். அதில், ஐபிஎல் போட்டிக்கு என்று தனி ரசிகர் வட்டாரம் இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்தநிலையில், கிரிக்கெட் விளையாட்டின் மூலம் தனக்கென ஒரு இடம் பிடித்தார் எம் எஸ் தோனி. இவர் என்ன செய்தாலும், என்ன சொன்னாலும் அது ரசிகர்களிடம் வைரலாகிவிடும். அந்த வகையில், ஒரு முறை தமிழ்நாட்டு பிரிமியர் லீக் போட்டியை முன்னிட்டு சென்னைக்கு வந்த எம்எஸ் தோனி, நடிகர் சூர்யா தனக்கு பிடித்த தமிழ் நடிகர் என்று தெரிவித்திருந்தார். சூர்யாவின் சிங்கம் படத்தை தமிழில் பார்த்ததாகவும், அந்த படத்தையும் சூர்யாவின் நடிப்பையும் மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்திருந்தார். ரஜினிக்கு அடுத்தது தனக்கு நடிகர் சூர்யாவை பிடிக்கும் என எம் எஸ் தோனி கூற அவரது ரசிகர்கள் குஷியாகி விட்டனர்.

  • Rukmini Vasanth in Prashanth Neel film சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு அடித்த மெகா அதிர்ஷ்டம்…கொத்தா தூக்கிய பிரபல இயக்குனர்…!