ரேப் சீனிற்கே பாட்டை வைத்த இசையமைப்பாளர்.. – அப்படியொரு பாட்டா.. பூரிப்பில் ரசிகர்கள்..!

Author: Vignesh
24 June 2023, 6:45 pm

சினிமாவில் 60, 70 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த இசையமைப்பாளர்களுள் மிக முக்கியமானவர் எம் எஸ் விஸ்வநாதன். இரட்டையர்களாக சினிமாவில் இருந்த எம்.எஸ். வி மற்றும் ராம மூர்த்தி ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து இசையமைக்க தொடங்கினர்.

M. S. Viswanathan-updatenews360

அந்த காலத்தில், எம்.எஸ்.வி பெரிய ஆளுமை கொண்ட இசையமைப்பாளராக உருவெடுத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் எம்.எஸ்.வியின் மகன் பிரகாஷ் பேட்டி ஒன்றில், சில சம்பவங்களை பகிர்ந்துள்ளார். தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

M. S. Viswanathan-updatenews360

இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய புன்னகை படத்திற்கு எம் எஸ் வி இசையமைத்திருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் என்றாலே கிளைமாக்ஸ் கட்சியில் சில டுவிஸ்ட்களை வைத்து இயக்குவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

punnagai-updatenews360

அப்படித்தான் புன்னகை படத்தில் கிளைமாக்ஸ் சீன் ரேப் சீன் இருப்பது போல் இயக்கியிருப்பார். அந்த சீனுக்கு எம்.எஸ்.வியிடம் ஒரு பாடலாக இருக்க வேண்டும் என்று கூற அப்படி ஒரு பாட்டினை கொடுத்திருக்கிறார் எம் எஸ் வி, ரேப் சீனுக்கே பாடல் வைத்தவர் என் அப்பா எம்எஸ்வி என்று மகன் பிரகாஷ் கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 396

    1

    0