“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
Author: Selvan27 December 2024, 12:56 pm
டப்பிங்கில் அசத்திய பிரபல நடிகர்கள்
கடந்த வாரம் திரையரங்கில் வெளியான முஃபாசா த லயன் கிங் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சிம்பாவின் தந்தையான முஃபாசா கடந்து வந்த பாதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் டகா,கிரோஸ்,ரஃபிக்கி,பும்பா,டிமோன் என நான்கு முக்கிய கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.படம் ஆங்கிலம்,ஹிந்தி,தமிழ்,தெலுங்கு என 4 மொழிகளில் வெளிவந்தது.
இதையும் படியுங்க: தலையே சுத்துது… சல்மான் கான் சொத்து மதிப்பு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!
அதில் குறிப்பாக தமிழ் மொழியில் பிரபல நடிகர்கள் டப்பிங் செய்துள்ளனர்.அந்தவகையில் அசோக் செல்வன்,நாசர்,VTV கணேஷ்,ரோபோ சங்கர்,சிங்கம் புலி ஆகியோர் குரலில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
They bring life to our favourite characters by their voice! ??
— Walt Disney Studios India (@DisneyStudiosIN) December 16, 2024
Presenting the voices in Tamil#Mufasa : The Lion King, only in cinemas this friday! pic.twitter.com/vF442PA5TH
இந்த தகவலை தெரிந்த ரசிகர்கள் அட இவ்ளோ கச்சிதமா குரல் கொடுத்து இருக்காங்களே என பாராட்டி வருகின்றனர்.